காமன்வெல்த்-2022

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி: இந்தியாவின் சவுரவ் கோசல் வெண்கலப்பதக்கம் வென்றார்..!

மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கல பதக்கம் வென்றார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் ,இங்கிலாந்தின் ஜேம்ஸ் வில்ஸ்ட்ரோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சவுரவ் கோசல் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சவுரவ்,  11-1, 11-4 என்ற கணக்கில் மொத்தம் 3 சுற்றுகளில் வெற்றி பெற்று சவுரவ் கோசல் வெண்கல பதக்கம் வென்றார்.

SCROLL FOR NEXT