காமன்வெல்த்-2022

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : தங்கம் வென்று இந்திய அணி சாதனை..!

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சரத் கமல் தலைமையிலான இந்திய ஆண்கள் அணி ,சிங்கப்பூரை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சத்யன் மற்றும் ஹர்மீத் தங்களுடைய ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.இதனால் இந்திய அணி 3- 1என்ற கணக்கில் வெற்றி பெற்று  காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்று அசத்தியது.

தங்கம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு