Image Tweeted By @Media_SAI 
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டி : சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை காலிறுதிக்கு தகுதி

கலப்பு இரட்டையர் பிரிவில் சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினத்தந்தி

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கங்களை வென்றுள்ளது.

7-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று முன்னதாக நடைபெற்ற ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியாவின் முன்னணி இணை சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல், வேல்ஸின் எமிலி விட்லாக்-பீட்டர் க்ரீட் இணையை எதிர்கொண்டனர்.

இந்த போட்டியில் சவுரவ் கோசல் - தீபிகா பல்லிகல் இணை 11-8,11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். நாளை நடைபெறும் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ரேச்சல் க்ரின்ஹாம் மற்றும் அலெக்சாண்டர் சாக் இணையை இந்திய இணை எதிர்கொள்கின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்