Image Courtesy : @BFI_official 
காமன்வெல்த்-2022

காமன்வெல்த் குத்துச்சண்டை : தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் அமித் பங்கால்

இறுதி போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டு உடன் மோதினார்.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை 14 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 42 பதக்கங்களை வென்றுள்ளது.

10-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற குத்துச்சண்டை ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டு உடன் மோதினார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆக்ரோஷம் காட்டிய அமித் இறுதியில் 5-0 என்ற கணக்கில் கியாரனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு