காமன்வெல்த்-2022

இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் தொடக்க விழா கோலாகலம்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

பர்மிங்காம்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான தொடக்க விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல உள்ளார்.

தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு