தேர்தல் செய்திகள்

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு -ரஜினிகாந்த் வரவேற்பு

பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து கூறப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கமலுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்கனவே அறிவித்து விட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது வெளியிட்டு எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள் என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் என கூறப்பட்டு உள்ளதை வரவேற்கிறேன். நான் நீண்ட நாட்களாக நதிகளை இணைப்பது குறித்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நதிகள் இணைந்தால் நாட்டின் வறுமை ஒழிந்து விடும். கோடிக்கணக்கான பேருக்கு வேலைகிடைக்கும். பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால் உடனடியாக அவர்கள் அதை செய்ய வேண்டும் என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்