உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து: வேல்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி..!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணியை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த போட்டியில் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்போர்டு தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து அதே அணியில் இருந்து பில் போடன் 51-வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

இங்கிலாந்து ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான தருணமாக மார்கஸ் ராஷ்போர்டு தனது இரண்டு முறை கோல் அடிக்க இங்கிலாந்து 3-0 என வேல்ஸை வீழ்த்தி அதிரடி வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கோல் அடிக்க வேல்ஸ் அணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போனது.

இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு இங்கிலாந்து தகுதிபெற்றது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை