உலக கோப்பை கால்பந்து - 2022

உலகக்கோப்பை கால்பந்து : கனடாவை வீழ்த்தியது குரோஷியா அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், கனடா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியது.

தினத்தந்தி

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 'எப்' பிரிவில் நடந்த ஆட்டத்தில் குரோஷியா- கனடா அணிகள் சந்தித்தன. ஆட்டம் தொடங்கிய 68-வது வினாடியில் கனடாவின் அல்போன்சா டேவிஸ் தலையால் முட்டி கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.

இந்த உலகக் கோப்பையின் அதிவேக கோல் இது தான். இதன் பிறகு சுதாரித்து மீண்ட குரோஷிய அணி பதிலடி கொடுத்தது. ஆந்த்ரேஜ் கிராமரிச் (36 மற்றும் 70-வது நிமிடம்), மார்கோ லிவஜா (44-வது நிமிடம்) லாவ்ரோ மஜேர் (90-வது நிமிடம்) ஆகியோர் குரோஷிய அணியில் கோல் போட்டு 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தேடித்தந்தனர். 4 புள்ளிகளுடன் குரோஷியா அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்தது. 2-வது தோல்வியை தழுவிய கனடா போட்டியை விட்டு வெளியேறியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்