Image Courtesy: AFP 
உலக கோப்பை கால்பந்து - 2022

உலக கோப்பையை 'பிரான்ஸ் வெல்லும்' - ரொனால்டோ கணிப்பு

கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது என பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார்.

தினத்தந்தி

தோகா,

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ நேற்று அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில்- பிரான்ஸ் அணிகள் மோதும் என்பதே எனது கணிப்பாக இருந்தது.

இப்போது பிரேசில் வெளியேறி விட்டது. இனி பிரான்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது. தடுப்பாட்டம், தாக்குதல், நடுகளம் என்று எல்லா வகையிலும் நிலையான ஒரு அணியாக இருக்கிறது. கிலியன் எம்பாப்பே, இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி வருகிறார். உடல் மற்றும் தொழில்நுட்ப அளவில் அவரது தரம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளின் மிகச்சிறந்த வீரராக அவர் உருவெடுக்கலாம்' என்றார்.

லயோனல் மெஸ்சி உலகக் கோப்பையை வென்றால் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி அடைவேன், ஆனால் ஒரு பிரேசில் வீரராக அல்ல' என்றும் குறிப்பிட்டார். 46 வயதான ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் மொத்தம் 15 கோல்கள் அடித்தவர் என்பது நினைவு கூரத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு