உலக கோப்பை கால்பந்து - 2022

பிரேசில் வீரரின் பேட்டிக்கு வந்த பூனை

அழையா விருந்தாளியாக வந்த பூனையைப் பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.

தினத்தந்தி

தோகா,

பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார். இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை