உலக கோப்பை கால்பந்து - 2022

உலக கோப்பை கால்பந்து - செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி

உலக கோப்பை கால்பந்து தொடரில் செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

தோகா,

கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது. இதில் செர்பியா, சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் செர்டான் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கு பதிலடியாக 26-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து சமனிலைப்படுத்தினார். தொடர்ந்து 35-வது நிமிடத்தில் செர்பியாவின் டுசான் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார்.

முதல் பாதியின் கடைசி கட்டத்தில் 44-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரில் எம்போலோ ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ரெமோ புருலெர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.

இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்