ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் முதல் சுற்றில் மணிகா பத்ரா வெற்றி

பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் மணிகா பத்ரா வெற்றிபெற்றார்.

தினத்தந்தி

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் பிரிவின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் அன்னா ஹர்சியுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 4-1 (11-8, 12-10, 11-9, 9-11, 11-5 ) என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வென்றார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரமிதா ஜிண்டால் வென்றார். துப்பாக்கி சுடுதல் 10 மீ ஏர் ரைபிள் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை மானு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தினார். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு