கோப்புப்படம் 
ஒலிம்பிக் 2024

வெண்கலம் வெல்லுமா இந்திய ஆண்கள் ஆக்கி அணி..? - ஸ்பெயினுடன் இன்று மோதல்

இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மோதுகின்றன.

தினத்தந்தி

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கி போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.

முன்னதாக ஸ்பெயின் தனது அரையிறுதியில் நெதர்லாந்திடம் தோற்று இந்த சுற்றுக்கு வந்துள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெல்லும் நிலையில், ஒலிம்பிக் ஆக்கியில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் வென்ற பெருமை பெறும். இதற்கு முன் 1968, 1972 ஆகிய இரு ஆண்டுகளில் இந்தியா அடுத்தடுத்து வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தைப் பொருத்தவரை, இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஒலிம்பிக் ஆக்கியில் இரு அணிகளும் இத்துடன் 10 முறை மோதியிருக்கும் நிலையில், இந்தியா 7 வெற்றிகள் கண்டுள்ளது. ஸ்பெயின் ஒரு வெற்றி பெற்றிருக்க, 2 ஆட்டங்கள் டிரா ஆகி உள்ளன. இந்த ஆட்டம் மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது.

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா