ஒலிம்பிக் 2024

வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று விசாரணை

இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் வினேஷ் போகத் மேல் முறையீட்டில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாரீஸ்,

உடல் எடை பிரச்சினையால் ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதை எதிர்த்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன்பு அப்பீல் செய்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். அவரது அப்பீலை ஏற்றுக்கொண்டுள்ள நடுவர் நீதிமன்றம், வக்கீலை நியமித்து வாதாடும்படி அவரது தரப்பை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் இன்று   விசாரணை நடக்கிறது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி