நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

பா.ஜ.க. கூட்டணி வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19-ந்தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.

பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க. 10 தொகுதிகளிலும், த.மா.கா. 3 தொகுதிகளிலும், அ,ம.மு.க. 2 தொகுதிகளிலும், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்விக் கழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பா.ஜ.க. கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதிய நீதிக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பா.ஜ.க.வின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன், முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அரவிந்த் ரெட்டி, தமிழ்நாடு பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து