நாடாளுமன்ற தேர்தல்-2024

ஆந்திர சட்டமன்றத்தேர்தலில் நடிகை ரோஜா தோல்வி

ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் 40,687 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தினத்தந்தி

நகரி,

நாடாளுமன்றத்தேர்தலோடு சேர்த்து ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் தமிழக எல்லையை ஒட்டியுள்ள நகரி தொகுதியில் பிரபல நடிகையும், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருந்தவருமான ரோஜா போட்டியிட்டார்.

கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ந்து 2 முறை போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ரோஜா, 'ஹாட்ரிக்' வெற்றிக்காக காத்திருந்தார்.

ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், முதல் சுற்றில் இருந்தே அவர் பின்தங்கியே இருந்தார். இதனையடுத்து அவர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார்.

இதற்கிடையே ரோஜாவை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட பானு பிரகாஷ் 40,687 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து