நாடாளுமன்ற தேர்தல்-2024

'கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது' - ஜி.கே.வாசன்

கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளதாகவும், தி.மு.க. அதற்கு உடந்தையாக இருந்துள்ளது என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகாலமாக இதுகுறித்து பேசாமல் தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. பேசி வருவது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளது. இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றுப் பிழையை செய்துள்ளது என்றும், தி.மு.க. அதற்கு உடந்தையாக இருந்துள்ளது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பா.ஜ.க. அரசியலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை கொண்டு வருகிறது என்றால், கச்சத்தீவு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது வாக்குகளை பெறுவதற்காகவா? கச்சத்தீவு விவகாரத்தில் அப்போதைய காங்கிரஸ் அரசு ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. அதற்கு தி.மு.க.வும் தெரிந்தே உடந்தையாக இருந்துள்ளது. அதன் தாக்கம் எதிர்வரும் தேர்தலில் தெரியும்."

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது