நாடாளுமன்ற தேர்தல்-2024

காங்கிரசில் இணைந்தார் தமிழக முன்னாள் டி.ஜி.பி. கருணா சாகர்

தமிழக முன்னாள் டி.ஜி.பி. கருணா சாகர் காங்கிரசில் இணைந்தார்.

டெல்லி,

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் கருணா சாகர். யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரியானார். 1991 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான கருணா சாகர் 1994ம் ஆண்டு கும்பகோணம் ஏ.எஸ்.பி.யாக பணியை தொடங்கினார்.

32 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. உள்பட பல்வேறு பதவிகளில் கருணா சாகர் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருணா சாகர் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்தார். அதன்பின்னர், அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தமிழக முன்னாள் டி.ஜி.பி. கருணா சாகர் தனது மனைவி அன்சுவுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பீகார் காங்கிரஸ் தலைவர் மோகன் முன்னிலையில் கருணா சாகர் காங்கிரசில் இணைந்தார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்