கோப்புப்படம் 
நாடாளுமன்ற தேர்தல்-2024

'பா.ஜனதா 300 இடங்களை தாண்டினால், அது மக்கள் அளித்த வாக்கு அல்ல' - காங்கிரஸ் மூத்த தலைவர்

மக்கள் வாக்களித்திருந்தால், அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

தினத்தந்தி

போபால்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்கர் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங், மத்தியபிரதேசம் போபாலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும். அதுதான் மக்கள் அளித்த தீர்ப்பு. அதேநேரம் பா.ஜனதா சொல்வதுபோல் 300 இடங்களை அவர்கள் தாண்டினால், அது மக்கள் அளித்த வாக்காக இருக்காது. மின்னணு எந்திரம் செலுத்திய வாக்காகத்தான் இருக்கும். மக்கள் வாக்களித்திருந்தால், அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காது.

இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து