நாடாளுமன்ற தேர்தல்-2024

மண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் வேட்புமனு தாக்கல்

கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

தினத்தந்தி

சிம்லா,

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது