நாடாளுமன்ற தேர்தல்-2024

பா.ஜனதாவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - வெளியான திடுக்கிடும் வீடியோ

இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக பரவி வரும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு 8 முறை வாக்குப்பதிவு செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' வலைதள பக்கத்திலும் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல்வேறு எதிர்கட்சியினர் இந்த வீடியோவை பகிர்ந்து பா.ஜனதாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து