நாடாளுமன்ற தேர்தல்-2024

மும்பை: அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

மும்பையில் உள்ள அம்பேத்கார், சாவர்கர் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 5-வது கட்ட தேர்தல் வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. 23 தொகுதிகளை கைப்பற்றியது. சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை மராட்டிய மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மும்பைக்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து மும்பை சைத்யா பூமி பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்ற அவர், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள சாவர்கர் நினைவிடத்திலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து