நாடாளுமன்ற தேர்தல்-2024

3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்: இன்று தொடங்குகிறது

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

18-வது மக்களவையை அமைப்பதற்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகள் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு உட்படுத்தப்படுகிறது. இதற்கிடையே 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று பிரசாரம் நடந்து வருகிறது. 2-ம் கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் 94 தொகுதிகளுக்காக நடைபெறும் 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 19-ந்தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. அவை 20-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22-ந்தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மே 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து