நாடாளுமன்ற தேர்தல்-2024

4-வது கட்ட தேர்தல்: மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு

4-வது கட்ட தேர்தலில் மாநில வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

96 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று நடந்த 4-ம் கட்ட தேர்தலில் மாநில வாரியாக பதிவான வாக்குகள் சதவீதம் வருமாறு:-

மேற்கு வங்காளம் (8 தொகுதிகள்) : 76.56 சதவீதம்,

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதி : 37.93 சதவீதம்

ஆந்திரா (25 தொகுதிகள்) : 68.20 சதவீதம்

பீகார் (5 தொகுதிகள்) : 56.75 சதவீதம்

ஜார்கண்ட் (4 தொகுதிகள்) : 64.59 சதவீதம்

மகாராஷ்டிரா (11 தொகுதிகள்) : 57.58 சதவீதம்

ஒடிசா (4 தொகுதிகள்): 64.81 சதவீதம்

தெலுங்கானா (17 தொகுதிகள்) : 62.28 சதவீதம்

உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்) : 58.05 சதவிதம்

மத்தியபிரதேசம் (8 தொகுதிகள்) : 71.72 சதவீதம்.

முன்னதாக நடந்த 3 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்கு விவரம் வருமாறு:

முதல்கட்ட தேர்தல் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தல் 66.71 சதவீதம், 3- கட்ட தேர்தல் : 65.68 சதவீதம்.

வாக்குசதவீதம் குறைவு:

4-வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

இது கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 4-வது கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை விட குறைவாகும். அந்த தேர்தலில் 4-வது கட்டமாக 71 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 65.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இதன் மூலம் இந்த தேர்தலில் 2.5 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் குறைந்திருக்கிறது.

எனினும் நேற்றைய தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடந்ததால் வாக்கு சதவீதம் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி