நாடாளுமன்ற தேர்தல்-2024

'பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார்' - நாராயணசாமி விமர்சனம்

பிரதமர் மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லாமல் குழம்பிப் போய் பேசி வருகிறார் என நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"3 கட்ட தேர்தல்களின் பிரசாரத்திலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் என்ன சாதனை செய்தார் என்று பட்டியல் போட்டு சொல்லாமல் குழம்பிப் போய் பேசிக்கொண்டிருக்கிறார்.

'இந்தியா' கூட்டணி 3 கட்ட தேர்தலில் முன்னணியில் இருக்கிறது. கண்டிப்பாக 7 கட்ட தேர்தலும் முடிவடைந்த பிறகு 'இந்தியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்."

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து