நாடாளுமன்ற தேர்தல்-2024

புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 75, 000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2, 80, 039 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம் 2, 04, 184 வாக்குகள் பெற்றுள்ளார். அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 75, 000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர்களே முன்னிலயில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை