நாடாளுமன்ற தேர்தல்-2024

ராகுல்காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வி - எடியூரப்பா

பிரதமர் மோடியின் சாதனைகளை வைத்து மக்களவை தேர்தலை சந்திக்கிறோம் என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே 7-ந்தேதியும் நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

மக்களவை தேர்தலை காங்கிரஸ் மறந்து விட்டது. ராகுல் காந்தியின் தலைமை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. மாநில காங்கிரஸ் அரசு மத்திய அரசின் மானியங்கள் பற்றி மட்டுமே பேசி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை அடிப்படையாக வைத்து இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம்.

நரேந்திர மோடி எப்படி 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினார் என்று எந்த புள்ளி விவரமும் இல்லாமல் தெரியாமல் காங்கிரஸ் கூறுகிறது. நாட்டில் 7 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 மாதங்களில் சித்தராமையா அரசு எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது? காங்கிரஸ் அரசு 10 மாதங்களில் ஒரு வேலையை கூட உருவாக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை