நாடாளுமன்ற தேர்தல்-2024

பிரதமர் மோடியின் பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் : தலைமை ஆசிரியரிடம் நடந்த விசாரணை நிறைவு

பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

கோவை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி பங்கேற்ற வாகன பேரணி நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. கவுண்டம்பாளையம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் வரை 2.5 கி.மீ. தொலைவு வாகன பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி சீருடை அணிந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்தது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என புகார் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணை 3 மணி நேரம் நடைபெற்றது. விசாரணை அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் , மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அளிக்க உள்ளார்.ஆசிரியர் பணியிடை நீக்கம் , பணியிட மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து