நாடாளுமன்ற தேர்தல்-2024

2 கோடி வாக்குகளை பெற்ற தி.மு.க. கூட்டணி... பா.ஜ.க.வுக்கு எவ்வளவு?

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் பெற்ற வாக்குகளின் மொத்த எண்ணிக்கை விவரங்கள் வெளிவந்துள்ளன.

இதன்படி, தி.மு.க. கூட்டணியினர் மொத்தம் 2 கோடியே 6 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த கூட்டணி மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியினர் 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளனர்.

இதேபோன்று பா.ஜ.க. கூட்டணியினர் மொத்தம் 79 லட்சத்து 44 ஆயிரத்து 700 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் 3-வது இடம் பிடித்துள்ளனர்.

இவை தவிர்த்து, கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகளை பெற்றுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து