நாடாளுமன்ற தேர்தல்-2024

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல் செய்தபோது ஜெகன் மோகனுடன் ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டி இருந்தார்.

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தெகுதி, 175 சட்டப்பேரவை தெகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் கடப்பா தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டி மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் இருந்தனர்.

முன்னதாக கடந்த 22ம் தேதி முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சார்பாக புலிவெந்துலா தொகுதியை சேர்ந்த உள்ளூர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி. கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்