கோப்புப்படம் 
மத்திய பட்ஜெட் - 2023

ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைப்பு

ஜனாதிபதி மாளிகை செலவுகளுக்கான நிதியில் ரூ.10 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட்டில், ஜனாதிபதி அலுவலக செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.90 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், ஒதுக்கப்பட்ட ரூ.84 கோடியே 80 லட்சத்துடன் ஒப்பிடுகையில், இது ரூ.5 கோடியே 34 லட்சம் அதிகம்.

ஜனாதிபதியின் சம்பளம் மற்றும் இதர படிகளுக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு ரூ.53 கோடியே 32 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகைய விட ரூ.15 கோடி அதிகம்.

அதே சமயத்தில், ஊழியர்கள் சம்பளம் உள்பட ஜனாதிபதி வீட்டு செலவுகளுக்கு ரூ.36 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், ரூ.46 கோடியே 27 லட்சம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ரூ.10 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 27 சதவீத தொகை துண்டிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்