பர்மிங்காம்,
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார். 28 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 11-21, 8-21 என்ற நேர் செட்டில் சரண் அடைந்தார். தரவரிசையில் 20-வது இடம் வகிக்கும் சாய்னாவுக்கு இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.