விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அபார வெற்றி

இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது.

தினத்தந்தி

பார்சிலோனா,

இந்த சீசனுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. இதில் பார்சிலோனா (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) ஆகிய அணிகளுக்கு இடையிலான அரைஇறுதியின் முதலாவது சுற்று பார்சிலோனாவில் உள்ள கேம்ப் நோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. லூயிஸ் சுவாரஸ் (26-வது நிமிடம்), லயோனல் மெஸ்சி (75, 82-வது நிமிடம்) கோல் அடித்தனர். இதன் மூலம் பார்சிலோனா கிளப்புக்காக மெஸ்சி அடித்த கோல்களின் எண்ணிக்கை 600-ஆக உயர்ந்தது.

இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதில் பார்சிலோனா டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்