விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரைஇறுதியில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது.

தினத்தந்தி

புஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, நம்பர் ஒன் இணையான மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோவை (இந்தோனேஷியா) சந்தித்தது. 40 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 20-22 என்ற நேர்செட்டில் தோல்வி கண்டு வெளியேறியது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது