கிரிக்கெட்

டெஸ்டில் விரைவாக 100 விக்கெட்டுகள்; கபில் தேவ் சாதனையை முறியடித்த பும்ரா

டெஸ்டில் விரைவாக 100 விக்கெட்டுகளை எடுத்த அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை இந்திய பந்து வீச்சாளர் பும்ரா படைத்துள்ளார்.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில், 290 ரன்கள் எடுத்தது.

2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் எடுத்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து இன்று கடைசி மற்றும் 5வது நாள் போட்டியில் அந்த அணி பேட்டிங்கை தொடர்ந்தது. இதில், ஒல்லி போப் 2 ரன்கள் எடுத்த நிலையில் 2வது செசனில் ஆட்டமிழந்து உள்ளார்.

அவரை இந்திய பந்து வீச்சாளர் பும்ரா வெளியேற்றினார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.

இதற்கு முன் 25 டெஸ்டுகளில் விளையாடி இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், பும்ரா 24 டெஸ்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 3வது இடத்தில், இர்பான் பதான் (28 டெஸ்ட் போட்டிகள்) உள்ளார்.

இதேபோன்று, சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வின் 18 போட்டிகளில் விரைவாக 100 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்த இந்திய வீரராக உள்ளார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை