கிரிக்கெட்

டி20: 2-வது வீரர்...மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா

3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்து குறைந்த பந்தில் அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் அதிவேக அரைசதம் அடித்த உலக சாதனை நேபாள வீரர் திபேந்திர சிங் ஐரி வசம் உள்ளது. 2023ஆம் ஆண்டு மங்கோலியா அணிக்கு எதிரான ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வெறும் 9 பந்துகளில் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

டி20 அதிவேக அரைசத பட்டியல்:-

9 பந்துகள்: தீபேந்திர சிங் ஐரி (நேபாளம்)

12 பந்துகள்: யுவராஜ் சிங் (இந்தியா)

13 பந்துகள்: மிர்சா அஹ்சன் (ஆஸ்திரியா)

14 பந்துகள்: காலின் முன்ரோ (நியூசிலாந்து)

14 பந்துகள்: ரோகித் சர்மா (இந்தியா)

14 பந்துகள்: அபிஷேக் சர்மா (இந்தியா)

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி