கிரிக்கெட்

முதல் ஒரு நாள் போட்டி: நியூசிலாந்துக்கு 281 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற 281 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை,

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (20), தவான் (9) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.

அணியின் கேப்டன் கோஹ்லி சதம் விளாசினார். அவருக்கு இது 31வது சதம் ஆகும். 111 பந்துகளில் சதம் அடித்ததில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகள் அடங்கும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 200வது போட்டியில் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார். இதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரரான அப் டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அடுத்து விளையாடிய கேதர் ஜாதவ் (12), தினேஷ் (37) ரன்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லியுடன் இணைந்து தோனி விளையாடினார். கோஹ்லி (121), தோனி (25), ஹர்தீக் பாண்டியா (16) மற்றும் புவனேஷ்வர் (26) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். குல்தீப் (0) ஆட்டமிழக்கவில்லை.

போட்டியின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற 281 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு