இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (20), தவான் (9) ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
அணியின் கேப்டன் கோஹ்லி சதம் கடந்து விளையாடி வருகிறார். அவருக்கு இது 31வது சதம் ஆகும். 111 பந்துகளில் சதம் கடந்துள்ளார். இதில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகள் அடங்கும். ஒரு நாள் போட்டி வரலாற்றில் 200வது போட்டியில் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை கோஹ்லி பெற்றுள்ளார்.
இதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரரான அப் டீ வில்லியர்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அடுத்து விளையாடிய கேதர் ஜாதவ் (12), தினேஷ் (37) ரன்களில் ஆட்டமிழந்தனர். கோஹ்லியுடன் இணைந்து தோனி விளையாடி வருகிறார்.