கிரிக்கெட்

முதல் டி20: இந்தியா - அயர்லாந்து இன்று மோதல்... எப்போது, எதில் பார்க்கலாம்?

டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெல்பாஸ்ட்,

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

முதல் டி20 இன்று

இந்திய கிரிக்கெட் அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி பெல்பாஸ்ட் நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய கேப்டன்

டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி களமிறங்கும் முதல் போட்டி என்பதால் இந்த ஆட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி

தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென்1, 3, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.