கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: அர்ஷ்தீப் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணி திணறல்- 4 வீரர்கள் 'டக்-அவுட்'

தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் 1 ரன்னிலும் கேப்டன் பவுமா டக் அவுட்டாகியும் வெளியேறினர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி மீள்வதற்குள் ரிலீ ரோஸோ, மில்லர் ஆகியோர் அர்ஷ்தீப் வீசிய 2-வது ஓவரில் அடுத்தடுத்து டக் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய ஸ்டப்ஸ், தீபக் சஹார் பந்துவீச்சில் டக் அவுட்டனார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. தற்போது வரை அந்த அணி 42 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரை அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும் தீபக் சஹார் 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்