கோப்புப்படம் 
கிரிக்கெட்

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகை தர உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அணியில் உள்ள வீரர்கள் தனித்தனியாக இன்று இரவுக்குள் சென்னை வந்தடைவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் நாளை முதல் பயிற்சியில் ஈடுபடுவார்கள். வங்காளதேச அணியினர் வருகிற 15-ந்தேதி டாக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், கேஎல் ராகுல், சர்பராஸ் கான், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா மற்றும் யாஷ் தயாள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்