கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டி; 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வரும் தென்ஆப்பிரிக்கா

முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் 8 விக்கெட்டுகளை இழந்து தென்ஆப்பிரிக்கா திணறி வருகிறது.

தினத்தந்தி

விசாகப்பட்டினம்,

இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்களுக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மயங்க் அகர்வால் இரட்டை சதமும் (215 ரன்), ரோகித் சர்மா சதமும் (176 ரன்) விளாசினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தென்ஆப்பிரிக்கா தொடங்கியது.

3வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளுக்கு 385 ரன்கள் சேர்த்து இருந்தது. நான்காம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், 431 ரன்களை குவித்து தென்ஆப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியை விட தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 71 ரன்கள் பின் தங்கியிருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஷ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன்பின் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்தபொழுது ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது. இதனால் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4 ரன்கள் எடுத்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் எல்கார் 3 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அந்த அணியினர் விளையாடினர்.

இதில் ஆட்ட நேர முடிவில் 9 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மர்க்ராம் (3), டே புரூயின் (5) ரன்கள் எடுத்திருந்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இந்த போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் 10 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழந்து 18 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரை இந்திய அணியின் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தில் டி புருயின் அடித்து ஆட முற்பட்டு அது பலனளிக்காமல் பந்து ஸ்டம்பில் பட்டு வீழ்த்தியது.

இதனால் 10 ரன்களில் டி புருயின் வெளியேறினார். அவரது விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வின் தனது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 350வது விக்கெட்டை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதனால் முத்தையா முரளிதரன் செய்த சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். மர்க்ராம் (39), பவுமா (0), டூ பிளெஸ்சிஸ் (13), டி காக் (0), பிலாந்தர் (0) மற்றும் மகாராஜ் (0) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் 117 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை