கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: போட்டியில் இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றிபெற்றது.

கொழும்பு,

இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் (57 ரன், 40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...