கிரிக்கெட்

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வென்றது பாகிஸ்தான்

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடந்தது.

தினத்தந்தி

இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் (91 ரன், 60 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் பாபர் அசாம் (52 ரன்) அரைசதம் அடித்தனர். முன்னதாக பாபர் அசாம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டியவர் (52 இன்னிங்ஸ்) என்ற சாதனையை நிகழ்த்தினா. இதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி 56 இன்னிங்சில் 2 ஆயிரம் ரன்களை எடுத்ததே அதிவேகமாக இருந்தது. அவரது சாதனையை பாபர் அசாம் முறியடித்திருக்கிறார்.

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்களே எடுக்க முடிந்தது. வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்