கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தது தென்ஆப்பிரிக்கா

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், முதலாவது ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று நடக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்