கிரிக்கெட்

20ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக் சேர்ப்பு

சோகைப் மசூத் காயம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து விலகியுள்ளதால் மாற்று வீரராக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்ற சோகைப் மசூத் காயம் காரணமாக விலகியுள்ளார் .

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேசிய 20 ஓவர் போட்டித்தொடரில் கடந்த அக்டோபர் 6ல் நடைபெற்ற போட்டியில் விளையாடிய சோகைப் மசூத் காயம் அடைந்ததால் . உலகக்கோப்பை அணியிலிருந்து விலகுகிறார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது .

மேலும் அவருக்கு பதிலாக சோயிப் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது .

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்