கிரிக்கெட்

23 முறை... சாதனை பட்டியலில் சிஎஸ்கேவை சமன் செய்த ஆர்சிபி!

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி வான்கடே மைதானத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது.

சென்னை,

ஐபிஎல் வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த போட்டிகளில் அந்த ஸ்கோரை வெற்றிகரமாகத் தற்காத்த அணிகளின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (RCB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணி வான்கடே மைதானத்தில் மும்பை அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில், பேட்டிங் செய்த பெங்களூரு, மும்பை அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. 20 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் எடுத்தது.

ஆனால், மும்பை அணியால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 200 ரன்களுக்கு மேல் எடுத்து அதை வெற்றிகரமாகத் தற்காத்த அணிகளின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

200+ ரன்களை அதிக முறை டிபெண்ட் செய்த அணிகள் பட்டியல்:

ஆர்சிபி & சிஎஸ்கே - தலா 23 முறை

மும்பை (MI) & ஐதராபாத் (SRH) - தலா 18 முறை

ராஜஸ்தான் (RR) & கொல்கத்தா (KKR) - தலா 15 முறை