கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரின் 2-வது பாதி போட்டிகள் யு.ஏ.இ-க்கு மாற வாய்ப்பா..?

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதினால் ஐ.பி.எல் தொடர் முழுமையாக இந்தியாவில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

அதற்கு ஏற்றார் போல் வரும் 22ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் வரையிலான முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் மக்களை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

இதையடுத்து தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் ஐ.பி.எல் தொடரின் 2வது பாதி ஆட்டத்தை இந்தியாவில் நடத்தலாமா அல்லது துபாயில் நடத்தலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்