லக்னோ,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இன்று மதியம் 1.30 மணிக்கு லக்னோவில் 2-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்தியா தீவிரம் காட்டும். மறுபுறம் தோல்விக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.