கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தென்ஆப்பிரிக்காவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

ஜோகனர்ஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பார்ல் நகரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பார்ல் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலாவதாக களமிறங்கிய கேப்டன் கே.எல். ராகுல் 4 பவுண்டரிகளுடன் அரை சதம் விளாசினார். அவர் 55 (79) ரன்களில் வான்டெர் துஸ்சென்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

தவான் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். விராட் கோலி டக் அவுட்டானார். தொடர்ந்து களமிறங்கிய ரிஷாப் பண்ட் அதிரடியாக ஆடி10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என மொத்தம் 85 (71 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 11 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. அஸ்வின் 25 ரன்கள் மற்றும் ஷர்துல் தாக்குர் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் தென்ஆப்பிரிக்க அணிக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...